உங்களுடைய பின்னூட்டத்தை நாங்கள் மதிக்கிறோம் எமது சேவை பற்றிய முறைப்பாடுகள், கருத்துக்கள் மற்றும் முறைப்பாடுகள் நாம் மேம்பட உதவுகின்றன.

எமது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் சிறப்பான சேவையை வழங்குவதற்கு நாம் கடுமையாக முயற்சிக்கிறோம், ஆனால் சிலவேளைகளில் விடயங்கள் பிழையாகிவிடுகின்றன என்பதை நாங்கள் அறிவோம். இது நிகழ்ந்தால், நீங்கள் எங்களுக்குத் தெரிவியுங்கள்.

பின்வருவனவற்றை எவ்வாறு செய்வதென இந்தப் பக்கம் விபரிக்கிறது:

  • ஒரு முறைப்பாட்டினை நாங்கள் எவ்வாறு கையாண்டோம் என்பது பற்றிய பின்னூட்டத்தை எங்களுக்குத் தாருங்கள், அத்துடன்/அல்லது
  • எமது வாடிக்கையாளர் சேவை பற்றிய ஒரு முறைப்பாட்டைத் தாக்கல்செய்யவும்.

நாங்கள் உங்களுக்குச் சேவையை எவ்வாறு வழங்குகினோம் என்பதைக்காட்டிலும், (ஒரு முறைப்பாடு குறித்து நாம் எடுத்த இறுதியான தீர்மானம் அடங்கலாக) ஒரு நிதி நிறுவன முறைப்பாட்டின் முடிவு ஒன்றினால் மாத்திரம் நீங்கள் அதிருப்தியடையும்வேளை, அத்தகைய நிலவரங்களை எங்கள் சேவை முறைப்பாடுகள் மற்றும் பின்னூட்ட நடைமுறை உள்ளடக்காது. AFCA ஒரு தீர்மானத்தை வழங்கும்போது, அது ஒரு முறைப்பாட்டின்மீதான இறுதி முடிவாகும். AFCA-க்கூடாக இதனை மேன்முறையீடுசெய்ய முடியாது.

நீங்கள் எவ்வாறு பின்னூட்டத்தை எமக்கு வழங்கமுடியும்

எங்களிடமிருந்து ஒரு பதிலை நீங்கள் வேண்டிக்கொள்ளாதபோது, ஒன்றில் 'முறைப்பாடு' அல்லது 'ஆலோசனை' - என்பதைத் தெரிவுசெய்து எமது மெய்நிகர் (online) பின்னூட்டப் படிவத்தைப் பூர்த்திசெய்வதுதான், உங்கள் பின்னூட்டத்தைப் பகிர்ந்துகொள்வதற்கான மிக இலகுவான வழியாகும். மின்னஞ்சல் ஊடாக, தொலைபேசி மூலம் அல்லது எழுத்தில் உங்கள் அனுபவங்களை நீங்கள் எங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.

நீங்கள் எமது சேவைபற்றி எவ்வாறு முறையிடலாம்

நாங்கள் உங்களுக்கு வழங்கும் சேவைபற்றி நீங்கள் எமக்கு முறையிட்டால், அதனை நாங்கள் விசாரணைசெய்து, அந்தப்பிரச்சினையை உங்களுடன் நேரடியாகத் தீர்த்துவைக்க முயற்சிப்போம். ஆனால் எம்மால் முடியாதுவிட்டால், உங்களது சேவை முறைப்பாட்டினை AFCA - உடைய 'சுயாதீன மதிப்பீட்டாளர்' (Independent Assessor) சுயாதீனமாக மீளாய்வுசெய்து, எழுப்பப்பட்ட ஏதேனும் சேவைப் பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுப்பதற்கு நாம் என்ன செய்யவேண்டுமெனப் பரிந்துரைப்பார்.

எமது சேவைபற்றி முறைப்பாடு செய்வதற்குப் பின்வருவனவற்றை நீங்கள் மேற்கொள்ளலாம்:

  • யாருடன் நீங்கள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளீர்களோ, அந்த நபரிடம் முதலில் சொல்லவும். பொதுவாக, நீங்கள் ஒரு நுகர்வோரோ அல்லது AFCA நிதி நிறுவன உறுப்பினரோ, இவர் உங்களது விடய முகாமையாளராவார் (case manager). அநேகமாகக் கூடியளவில், நேரடியாக அவர்கள் உங்களுக்காக விடயங்களைத் தெரிந்தெடுப்பார்கள்.
  • உங்களுக்காகப் பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துவிட்டதாக நீங்கள் உணராதுவிட்டால், உங்களது சேவை முறைப்பாட்டினைப் பார்க்குமாறு ஒரு முகாமையாளரிடமும் நீங்கள் கேட்கலாம்.
  • மற்றபடி, எமது மெய்நிகர் பின்னூட்ட படிவத்தைப் பூர்த்திசெய்து, 'AFCA பற்றிய சேவை முறைப்பாடு' (“Service complaint about AFCA”) என்பதைத் தெரிவுசெய்யலாம். ஒரு சில வேலை நாட்களுக்குள் தனியான ஒரு குறியீட்டு இலக்கத்தை நீங்கள் பெறுவீர்கள்.

யாருடன் தொடர்புகொள்ள வேண்டுமென்பது உங்களுக்கு நிச்சயமாகத் தெரியாதுவிட்டால், 1800 931 678 - இல் எங்களை அழையுங்கள், உதவக்கூடிய ஒருவருடன் உங்களுக்கு நாங்கள் தொடர்பை ஏற்படுதுவோம்.

எமது சேவைபற்றிய ஒரு முறைப்பாட்டை நாம் எவ்வாறு கையாளுகிறோம்

எமது சேவைபற்றி நீங்கள் ஒரு முறைப்பாட்டைத் தாக்கல் செய்தால், நாங்கள் அதனை விசாரிப்பதுடன் உங்களால் எழுப்பப்பட்ட கவலைகளை ஆராய்ந்து அவற்றிற்கான பதிலை அளிப்போம்.

உங்களுடைய முறைப்பாட்டுக்கு மேலதிக நடவடிக்கை தேவைப்பட்டால், ஒரு சரியான தீர்மானத்தை எட்டுவதற்காக நாங்கள் உங்களுடன் சேர்ந்து உழைப்போம்.

தொடர்புபட்ட நிதி நிறுவன முறைப்பாடு முடிவடைந்ததிலிருந்து ஆறு மாதங்களுக்குள் எமது சேவைபற்றிய முறைப்பாடுகள் கட்டாயமாகத் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

எவ்வகையான சேவை பிரச்சினைகள் பற்றி நீங்கள் முறையிடலாம்

பின்வருவன போன்ற எமது சேவை பற்றிய முறைப்பாடுகளை நாம் ஆராய்ந்து பார்க்கலாம்:

  • AFCA பணியாளர்களின் நிபுணத்துவம், தகமை மற்றும் மனப்பாங்கு
  • தகவல் பரிமாற்றம்
  • நியாயம் மற்றும் பக்கம்சாராமை
  • பொருத்தமான காலம்
  • எமது நடமுறையை அனுசரித்தல்.

யார் முறையிடலாம்

நிதி நிறுவன முறைப்பாடு ஒன்றினை எங்களிடம் தாக்கல்செய்த நுகர்வோர் அல்லது சிறுவியாபாரி ஆகிய இருவரும், அல்லது AFCA அங்கத்தவராக இருக்கும் ஒரு நிதி நிறுவனம் எமது சேவைபற்றி முறையிடலாம்.

எதனை நாங்கள் சேவை முறைப்பாடு ஒன்றில் ஆராயமுடியாது

ஒரு நிதி நிறுவன முறைப்பாடு ஒன்றின் முடிவு பற்றி மாத்திரம் இருக்கக்கூடிய எமது சேவைபற்றிய முறைப்பாடுகளுக்கு நாங்கள் நடவடிக்கையெடுக்க முடியாது.

உதாரணமாக:

  • எமது நியாயாதிக்கத்திற்கு அப்பால் இருப்பதனால், உங்களது நிதி நிறுவன முறைப்பாட்டை நாங்கள் ஆராய முடியாது என்பது பற்றி நீங்கள் கவலைப்பட்டால், அல்லது
  • முடிவு குறித்து அல்லது நாம் வழங்கிய முடிவின் சாராம்சங்கள் குறித்து நீங்கள் அதிருப்திகொண்டால்.

எமது சேவை முறைப்பாடுகள் நடைமுறையூடாக எம்மால் இவை ஆராயப்படமுடியாத விடயங்களாகும்.

என்ன தகவல்களை நீங்கள் உங்களது சேவை முறைப்பாட்டில் வழங்கவேண்டும்

எமது சேவைபற்றி மெய் நிகர் பின்னூட்டப் படிவத்தை பூர்த்திசெய்யும்போது, நீங்கள் கட்டாயமாக இயன்றளவு குறிப்பிட்டுக் காட்டுவதுடன், உங்களுடைய கருத்துக்களுக்கு ஆதரவான தகவல்கள் எதனையும் நீங்கள் வழங்கலாம். மின்னஞ்சல் விபரங்கள் அல்லது உங்களுக்கும் AFCA விடயமுகாமையாளருக்கும் இடையில் நிகழ்ந்த தொலைபேசி அழைப்புகள், எங்களால் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆவணங்கள், அத்துடன் உங்களால் எமக்குக் கொடுக்கப்பட்ட ஆவணங்கள் போன்றவை தகவல்கள் என்பதனுள் அடங்கக்கூடும்.

சேவை முறைப்பாடு ஒன்றிற்கு எவ்வாறான முடிவுகளை நாம் வழங்கலாம்

எமது சேவை பற்றிய ஒரு முறைப்பாட்டுக்குச் சாத்தியப்படக்கூடிய பல எண்ணிக்கையான முடிவுகளும், தீர்மானங்களும் இருக்கின்றன. அவற்றுள் அடங்குபவை:

  • எமது நடைமுறை பற்றிய விளக்கம் அத்துடன் எம்மால் உங்களது முறைப்பாடு எவ்வாறு கையாளப்பட்டது என்பது பற்றிய தகவல்கள்
  • நீங்கள் எழுப்பிய பிரச்சினையைக் கருத்தில்கொள்ளல்
  • எமது சேவைத் தராதரங்களை நாங்கள் பூர்த்திசெய்யத் தவறினால், மன்னிப்புக் கோரல்
  • உங்களது நிதி நிறுவன முறைப்பாட்டை நாம் கையாளும் வழிமுறையில் ஒரு மாற்றம்
  • பிரச்சனைகளைத் தொடர்ந்தும் கண்காணித்தல்
  • எமது ஆட்களுக்குப் பயிற்சியளித்தல்
  • பொருத்தமான சந்தர்ப்பசூழ்நிலைகளில் நிதிசாரா இழப்பிற்கு இழப்பீடு வழங்கப்படக்கூடும்.

உங்களது சேவை முறைப்பாட்டின் முடிவில் நீங்கள் இன்னமும் திருப்திகொள்ளாதுபோனால் நீங்கள் என்ன செய்யலாம்

உங்களது சேவை முறைப்பாட்டுக்கு எமது பதில் உங்களுக்குத் திருப்தியளிக்காதுவிட்டால், சுயாதீன மதிப்பீட்டாளருக்கு நீங்கள் முறைப்பாடு செய்யலாம். 

எமது சேவை பற்றிய முறைப்பாடுகளைப் பக்கச்சார்பின்றி விசாரிப்பதற்கு AFCA சபையினால் சுயாதீன மதிப்பீட்டாளர் நியமிக்கப்படுகிறார்.

சுயாதீன மதிப்பீட்டாளர் 

எமது சேவை பற்றி உங்கள் பின்னூட்டத்தை(பாராட்டுகள், அபிப்பிராயங்கள் அல்லது முறைப்பாடுகள்) எமக்குத் தெரிவிப்பதற்கு, பின்னூட்டப் படிவத்தைத் தயவுசெய்து பூர்த்தி செய்யவும் (PDF பின்னூடாப் படிவம்).

Sorry, we’re currently offline.

Would you like to end your chat with AFCA?

Please bear in mind that your conversation will not be saved.

AFCA chat service terms and conditions

Welcome to our live chat help service.

Please be advised we cannot provide you with financial or legal advice. However, we may be able to refer you to a community legal centre or financial counselling service if you need help.

Our live chat is operated by Genesys Cloud on behalf of AFCA. Any personal information provided in this chat will be captured by both organisations in accordance with their privacy policies, available at www.afca.org.au/privacy and www.genesys.com/company/legal/privacy-policy

Offline

We provide consumers and small businesses with fair, free and independent dispute resolution for financial complaints.

Please enter your details to start your chat with an AFCA representative.

Please enter your name
Please enter a valid email address
Please enter a valid phone number

We provide consumers and small businesses with fair, free and independent dispute resolution for financial complaints.

Welcome to our live chat help service.

An agent should be with you shortly.